SKIP TO MAIN CONTENT

அலர்ஜி – மருந்து ஒவ்வாமையை நாம் எப்படி தெரிந்துகொள்வது?

அலர்ஜி – மருந்து ஒவ்வாமையை நாம் எப்படி தெரிந்துகொள்வது?

Taking pills
Boy taking a pill Source: Getty Images

3 min read

Published

By Raymond Selvaraj


Skip to article content

ஆஸ்திரேலியாவில் மருந்துகள் எனும் தலைப்பில் கேள்வி – பதில் வடிவில் இந்த கட்டுரையை  எழுதியிருப்பவர் அன்பு ஜெயா அவர்கள். அவர் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர்.   

 

  1. 1.   இந்தமருந்துநமக்குஒத்துக்கொள்ளாது (Allergy) என்பதைமுன்னதாகஎப்படிஅறியமுடியும்?

 

இது சற்று கடினமான காரியம். உங்களுக்கு சில பொருட்கள் ஒத்துக்கொள்ளாது என்பது தெரிந்திருந்தால் நல்லது. நாம் வாங்கும் மருந்துகளில் மூலமருந்து மட்டும் இருக்காது. அந்த மூலமருந்தை மாத்திரையாகவோ, ஊசி மருந்தாகவோ, மற்ற வடிவிலோ தயாரிப்பதற்குத் தேவையான இதர ரசாயனப் பொருட்களும் இருக்கும். அவைகூட ஒவ்வாமைக்குக் காரணமாக இருக்கலாம். நாம் வாங்குகின்ற மருந்துகளில் மூலமருந்து தவிர மற்ற பொருள்கள் என்ன இருக்கின்றன என்ற விவரம் மருந்துகளுக்கான Consumer Medicine Information-ல் இருக்கும். அதைப் படித்துத் தெரிந்துகொண்டு ஒவ்வாதவற்றைத் தவிர்க்கலாம். Consumer Medicine Information இல்லையென்றால், அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து தொலைபேசி மூலம் அறியலாம். அந்த விவரம் தெரியாத போது Allergyஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் சென்று உதவி பெறவேண்டும். Allergyமோசமாக இருந்தால் 000 எண்ணைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை அழைப்பது நல்லது.

 

  1. 2.   புதிதாகவெளியிடப்பட்டஒருமருந்துAllergyஉண்டாக்கலாம்என்பதுTherapeutic Goods Administration-க்குஎப்படித்தெரியும்?

 

ஒரு மருந்து Allergy உண்டாக்கியுள்ளது என்பது அந்த நோயாளி மூலம் தெரிய வரும்போது மருத்துவர், மருத்துவ மனைகள், பார்மசிஸ்டுகள் போன்றவர்கள் Therapeutic Goods Administration-ல் உள்ள Medicine Safety Section -க்கு அறிவிப்பார்கள். நோயாளிகளும் அறிவிக்கலாம். இப்படி ஒரே மருந்திற்கு பல report-கள் வந்தால் Therapeutic Goods Administration அவற்றை நன்கு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். தேவைப்படுமானால் அந்த மருந்தை விற்பதற்கான அனுமதியையும் ரத்து செய்வார்கள்.

 

  1. 3.   மருத்துவரின்சீட்டுக்குமருந்துகொடுப்பதுமட்டும்தான்பார்மசிஸ்டுகளின்வேலைஎன்றுசிலர்நினைத்துக்கொண்டுஇருக்கிறார்கள். அதுபற்றிஉங்கள்கருத்துஎன்ன?

 

அந்த எண்ணம் தவறானது.

 

  • மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக மருந்துகள் பற்றி நோயாளிகளுக்குத் தேவையான முக்கிய தகவல்கள் அனைத்தையும் பார்மசிஸ்டுகள் அறிந்திருப்பார்கள்.

 

  • மேலதிகமான விவரங்களையும் அவர்களால் சுலபமாகப் பெறமுடியும்.
  • தேவைப்படும்போது சில மருந்துகளை அவர்களே தயாரித்துக் கொடுப்பார்கள்.
  • மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நோயாளிகளுக்கு அறிவுரைகள் கூறுவார்கள்.
  • மருந்துகளின் அளவு, அவற்றின் பக்க விளைவுகள், ஒரு மருந்தை மற்ற மருந்துகளுடன் சேர்த்து சாப்பிடும் போது ஏற்படும் விளைவுகளை, drug interaction என்று கூறுவார்கள். அதுபோன்ற தகவல்களை மருத்துவர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிப்பார்கள்.
  • பொது மக்களுக்கு மருந்துகளை சரியாகப் பயன்படுத்துவது பற்றியும், நோய் தடுப்பு பற்றியும் அறிவுரை கூறுவார்கள்.
  • மருந்துகள் பற்றிய தங்கள் அறிவை continued professional education மூலம் புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள்.
  • புதிதாக வருகின்ற மருந்துகள், மருத்துவ சாதனங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பார்கள்.
  • புதிதாக பட்டம் பெற்று வருகின்ற பார்மசிஸ்டுகளுக்கும், பார்மசியில் வேலை செய்யும் மற்றவர்களுக்கும் பயிற்சி அளிப்பதும் அவர்களுடைய பல வேலைகளில் ஒன்றாகும்.

 

மொத்தத்தில், prescription medicines, OTC medicines, complemetary medicine, medical decvices போன்ற அனைத்தையும் பற்றி பொதுமக்கள் பார்மசிஸ்டுகளிடம் கேட்டறிந்து பயன்பெறலாம். எப்போதும் இப்படிப்பட்ட சேவைகளைச் செய்ய பார்மசிஸ்டுகள் தயாராக இருப்பார்கள் என்று கூறினால் அது மிகை ஆகாது.

 

  1. 4.   ஆஸ்திரேலியாவில்நாம்பயன்படுத்துகின்றமருந்துகள்அனைத்தும்இங்குதயாரிக்கப்படுகின்றனவா?

 

நாம் மருத்துவர் சீட்டு இல்லாமல் வாங்கக் கூடிய மருந்துகளில் பெரும்பாலானவை இங்கு தயாரிக்கப்படுகின்றன என்று கூறலாம். மருத்துவர் சீட்டு பெற்று மட்டுமே வாங்கக் கூடிய மருந்துகள், அதிலும் புதியதாக வெளிவரும் மருந்துகள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் சில மருந்துகளை ஓரிரு நாடுகளில் உள்ள தங்களுடைய தொழிற்சாலைகளில் பெரிய அளவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளில் உள்ள தங்கள் அமைப்புகள் மூலம் விநியோகம் செய்கிறார்கள்.

 

  1. 5.   இதற்குஎன்னகாரணம்என்றுநினைக்கிறீர்கள்?

 

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பெரும்பாலான உற்பத்திச் செயல்களை இயந்திர மயமாக்கி அதிக அளவில் உற்பத்தி செய்வதால் அந்த நிறுவனத்துக்கு பல நன்மைகள் உள்ளன. பொதுவாக ஒரே இடத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்வதால் அந்த நிறுவனத்துக்கு நிகர லாபமும் அதிகமாக இருக்கும். மருந்து தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்களுக்கு செய்யும் முதலீடு, inventory  என்னும் கையிருப்பில் வைத்திருக்கவேண்டிய மூலப்பொருள்களின் அளவு, ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் technology / method transfer போன்ற செய்முறை மாற்றங்களுக்கான செலவு, அதற்காக வேலை செய்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் உள்ள காலம் போன்ற விஷயங்களில் கணிசமாக செலவைக் குறைக்க வழி உள்ளது. அதனால் centralised production பெரிய நிறுவனங்களுக்கு உகந்ததாக உள்ளது.

 

(கட்டுரையாளர்: அன்பு ஜெயா, Pharmaceutical Chemist) 

 

இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவான தகவல் மட்டுமே. அதிக தகவலுக்கும், குறிப்பிட மருந்துபொருட்கள் குறித்த தகவலுக்கும் நீங்கள் Therapeutic Goods Administration ஐ தொட்ரபுகொள்ளுங்கள். TGA-வின் இணைய தளம் www.tga.gov.au TGA தகவல் அறியும் தொலைபேசி இலக்கம்: 1800 020 653 அல்லது 02 6232 8644. மின்னஞ்சல் முகவரிinfo@tga.gov.au


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now