Aldi பல்பொருள் வணிக மையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட lettuce பையினுள், உயிருள்ள சிறிய பாம்பு காணப்பட்டதாக சிட்னி பெண்ணொருவர் முறையிட்டதையடுத்து Aldi நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனது மகன் lettuce பையைத் திறந்தபோது அதற்குள் மிகச்சிறிய பாம்பொன்று காணப்பட்டதாகவும் Aldi-இல் இவ்வாறான காய்கறிகளை வாங்குபவர்கள் அவதானமாக இருக்குமாறும் Lesley என்ற பெண் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
Lettuce பையினுள் பாம்பு எப்படிச் சென்றது என்பது புரியாத புதிராகவே உள்ளதாகவும், குறித்த தொகுதி lettuce பைகள் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தரப்பினருடன் இணைந்து இதுதொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் Aldi நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பாம்பு Wildlife Information, Rescue and Education Service பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை lettuce பறிக்கப்பட்டபோது அதற்குள் மறைந்திருந்த இச்சிறிய பாம்பு lettuce-உடன் சேர்த்து பையினுள் அடைக்கப்பட்டு, விற்பனைக்கு செல்லும்வரையான காலப்பகுதியில் அதற்குள்ளேயே இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், இது தம்முடைய ஊகம் மாத்திரமே எனவும் Wildlife Information, Rescue and Education Service பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
