இன்று தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Alex Hawke கூறியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என தனது வாழ்த்துகளை அவர் கூறியுள்ளார்.
கோவிட் பரவலிலிருந்து விடுபட்டு ஆஸ்திரேலியா படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் பின்னணியில், விரைவில் நமது உறவுகளுடன் சேர்ந்து இவ்வாறான பண்டிகைகளை கொண்டாடும் நாளை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம் என அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் ஆற்றிவரும் பங்களிப்பிற்கு தனது நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: MINISTER FOR IMMIGRATION
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.