தெற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு மர்மமான வகையில் புதைக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்துவந்து தாதியர் கற்கைநெறியை மேற்கொண்டுவந்தவரும் முதியோர் இல்லமொன்றில் பணிபுரிந்தவருமான 21 வயதான Jasmeen Kaur, மார்ச் 5ம் திகதி பணிமுடிந்து வீடுதிரும்பவில்லை என தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார், இந்தியப் பின்னணி கொண்ட 20 வயதான Tarikjot Singh என்பவரை விசாரித்தபோது, அவர் தெற்கு ஆஸ்திரேலியாவின் Flinders Ranges பகுதிக்கு அருகாமையில் பொலீஸாரை அழைத்துச்சென்று, அங்கு குறிப்பிட்ட பெண் புதைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், அவரது மரணத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன் இந்த மரணம் தொடர்பில் பொலீஸாருக்கு தகவல் தெரிவிக்காதமை குறித்து முதலில் குற்றச்சாட்டினை பதிவுசெய்த பொலீஸார், குறிப்பிட்ட இளைஞனை தொடர்ச்சியாக விசாரித்தபின்னர், அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டினையும் பதிவு செய்தனர்.
குறித்த இளைஞர், Jasmeen Kaur பணிமுடிந்து கார் தரிப்பிடத்திற்கு வந்தபோது அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பின் கொலைசெய்திருப்பதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடமுடியாதவாறு நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து தற்போது இவரது விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
