இணையமூடாக பொருட்களை விற்பனை செய்யும் அமேசன் நிறுவனம் அடுத்த கட்டமாக பல விற்பனைக்கூடங்களைத் திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2021ம் ஆண்டளவில் சுமார் மூவாயிரம் விற்பனைக்கூடங்களை அமேசன் திறக்கவுள்ளதாக Bloomberg செய்திவெளியிட்டுள்ளது.
அமேசன் நிறுவனத்தின் முதலாவது Amazon Go store அதன் ஆரம்ப இடமான Seattle-இல் 2016ம் ஆண்டு திறக்கப்பட்ட பின்னணியில் புதிய இடங்களில் பெரும் எண்ணிக்கையில் விற்பனைக்கூடங்கள் திறக்கப்படவுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாளர் இல்லாத தானியங்கி சேவை உட்பட பல மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் அமையும் அமேசன் விற்பனைக்கூடங்களில் உணவுப்பொருட்கள் முதல் புத்தகங்கள் வரை சகல பொருட்களும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
