அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக Exxon Mobil நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றிய Rex W. Tillerson தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு அடுத்தபடியாக அதிக பலம் அல்லது செல்வாக்குள்ள பதவியான வெளிவிவகார அமைச்சர் (secretary of state) பதவிக்கு, Donald Trump யாரைத் தெரிவு செய்வார் என்று எதிர்பார்ப்புடன் பலர் காத்திருந்த நிலையில் அப்பதவிக்கு Exxon Mobil நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றிய Rex W. Tillerson-ஐ Donald Trump தெரிவுசெய்துள்ளார்.
இந்தப் பதவிக்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட Mitt Romney, நியூ யோர்க் நகர மேயராகக் கடமையாற்றிய Rudy Giuliani, ஐ.நா சபையின் அமெரிக்க தூதுவராகக் கடமையாற்றிய John Bolton, அமெரிக்க புலனாய்வுத் துறையின் CIAயின் தலைவர் David Petraeus, செனட் அவை உறுப்பினர் Bob Corker மற்றும் இளைப்பாறிய இரணுவ அதிகாரி John Kelly ஆகியோருடைய பெயர்களும் அடிபட்டன.
இதேவேளை Rex Tillerson அவர்களுக்கு ரஷ்ய நாட்டுடன் வியாபாரத் தொடர்புகள் இருப்பதாகவும், ரஷ்ய அதிபர் Vladimir Putinனுடன் நெருங்கிய உறவை இவர் வளர்த்துக் கொண்டுள்ளமையாலும், இவரை இந்தப் பதவிக்கமர்த்த, அமெரிக்க காங்கிரஸ் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Share
