SKIP TO MAIN CONTENT

அமெரிக்கா செல்லும் அகதிகளுக்கான நேர்காணல்கள் மீண்டும் ஆரம்பம்

Asylum seekers in the Manus Island detention centre
Asylum seekers in the Manus Island detention centre Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி அங்கு குடியமர்த்தப்படவுள்ளவர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்காணல்களைத் தொடரும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மனுஸ் தீவுக்குச்  சென்றுள்ளனர்.

பப்புவாநியூகினியின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ளவர்களில் இதுவரை 70 பேர் மாத்திரமே அமெரிக்க அதிகாரிகளால் நேர்காணப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் கட்டம் கட்டமாக நேர்காணலுக்குட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் தற்போதைய விஜயத்தின்போதான நேர்காணல்கள் இவ்வாரம் ஆரம்பமாகின்றன.

குறித்த நேர்காணல்களுக்கான கடிதங்கள் கிடைக்காதவர்கள் கவலையடையத்தேவையில்லை எனவும், அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்தும் வருகை தரவுள்ளதாகவும் குடிவரவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை மனுஸ் தடுப்பு முகாம் எதிர்வரும் அக்டோபர் இறுதியுடன் முற்றிலுமாக மூடப்படவுள்ள நிலையில், அமெரிக்கா செல்லத் தகுதிபெறாத அகதிகள் பப்புவா நியூகினியிலேயே குடியமர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now