அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அங்கு குடியமர்த்தப்படுபவர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்காணல்களின் ஒரு கட்டமாக, மனுஸிலுள்ள 60 அகதிகள் அடுத்தவாரம் நேர்காணலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வாரம் 14ம் திகதி முதல் அமெரிக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இந்நேர்காணல்களில் பங்கேற்கவுள்ளவர்கள், Port Moresby-க்கு செல்ல வேண்டியிருக்கும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டவர்கள் ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின்படி, இதுவரை பப்புவா நியூ கினி மற்றும் நவுறு ஆகிய இடங்களிலிருந்து, 54 அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
