அமெரிக்கா நேற்று ஆஸ்திரேலியாவுக்கு அளித்த “Sate Dinner” ஏன் முக்கியமானது?

ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison அவர்களை அமெரிக்க அதிபர் Donald Trump அமெரிக்க அரசின் “Sate Dinner” (அரசு விருந்து)க்கு அழைத்து நேற்று விருந்து கொடுத்தது ஆஸ்திரேலிய அரசியலில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏன்?

PM Scott Morrison in USA

Source: AAP

ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டின் தலைவரை அழைத்து விருந்து கொடுப்பது “Sate Dinner”  (அரசு விருந்து) என்று அழைக்கப்படுகிறது. இப்படியான விருந்தை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் அவ்வப்போது செய்வதுண்டு. ஆனால் அமெரிக்கா போன்ற மிகவும் பலம் பொருந்திய நாடு பிற நாடு ஒன்றை அழைத்து “Sate Dinner”  (அரசு விருந்து) தருவது அரசியல் முக்கியவத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவதுண்டு.

இந்த பின்னணியில்தான் அமெரிக்கா நேற்று ஆஸ்திரேலியாவுக்கு அளித்த “Sate Dinner” புருவம் உயர்த்தி உலகில் பார்க்கப்படுகிறது.  

மிகவும் நட்புடன் இருக்கும் நாட்டின் தலைவரை ஒரு நாடு “Sate Dinner”  (அரசு விருந்து)க்கு அழைப்பதுண்டு. அந்த வகையில் ஆஸ்திரேலிய பிரதமர்  Scott Morrison அவர்களை அமெரிக்க அதிபர் Donald Trump அமெரிக்க அரசின் “Sate Dinner”  (அரசு விருந்து)க்கு அழைத்து நேற்று  விருந்து கொடுத்தது ஆஸ்திரேலிய அரசியலிலும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் Donald Trump பதவி ஏற்று சுமார் மூன்று ஆண்டுகளில் அவர் இதுவரை ஒரே ஒரு நாட்டின் தலைவரை மட்டுமே “Sate Dinner”  (அரசு விருந்து)க்கு அழைத்து விருந்தளித்துள்ளார். கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron விருந்துக்கு அழைக்கப்பட்டார். நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison க்கு இந்த விருந்து தரப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா அதி முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் George W. Bush ஆஸ்திரேலியாவின் அன்றைய பிரதமர் John Howard அவர்களுக்கு “Sate Dinner” (அரசு விருந்து) அளித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின் நேற்று மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த மரியாதை தரப்பட்டுள்ளது.

ஏதோ ஒரு விருந்து என்ற ரீதியில் அமெரிக்காவின் இந்த விருந்து அமையவில்லை என்றும் இந்த விருந்தின் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  

முதலில் அமெரிக்க அதிபர் Donald Trump அவர்கள் சீனாவுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பொருளாதார கட்டுப்பாடுகள் அல்லது கடுமையான வரி விதிப்புகள். அமெரிக்காவின் இந்த கடுமையான போக்கிற்கு ஆஸ்திரேலியா ஆதரவு தரவேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா உலகில் அதிக வர்த்தகம் செய்யும் முதல் நாடு சீனா. அந்த நாட்டுடன் ஆஸ்திரேலியா கடுமையாக நடந்துகொள்ள இயலுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் நட்புக்காக ஆஸ்திரேலியா அமெரிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலைப்பாட்டால் சீனாவுடனான வர்த்தகத்தில் சிக்கல் எழுந்து ஆஸ்திரேலியா பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடலாம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரண்டாவது அமெரிக்க அதிபர் Donald Trump அவர்கள் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையில் அல்லது ராணுவ ரீதியான தலையீட்டில் ஆஸ்திரேலியாவும் கலந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக  அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என்ற வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா பச்சைக்கொடி காட்டிவிட்ட பின்னணியில் ஆஸ்திரேலியாவுக்கு நன்றி கூறும் விதமாகவும் அமெரிக்க அதிபர் Donald Trump அமெரிக்க அரசின் “Sate Dinner”  (அரசு விருந்து)க்கு ஆஸ்திரேலிய பிரதமரை அழைத்திருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அரசின் “Sate Dinner”  (அரசு விருந்து)க்கு அமெரிக்கா செலவிடும் தொகையைவிட ஆஸ்திரேலியா கொடுக்கும் விலை மிக அதிகம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுவதாக ABC ஊடக விமர்சனம் கூறுகிறது.                        


2 min read

Published

By Raysel

Source: ABC Australia


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now