SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்கள் இனிமேல் Amazon.com-இல் பொருட்களை வாங்க முடியாது!

A file image of packages from Amazon
People in Australia will be redirected to only use Amazon's local website from July 1. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமேசன் இணைய நிறுவனத்திலிருந்து பொருட்களை வாங்க முடியாதவாறு ஆஸ்திரேலியர்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.

நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் GST-பொருள் மற்றும் சேவைகளுக்கான வரியில் கொண்டுவரப்படும் மாற்றத்திற்கேற்ப இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், Amazon.com என்ற இணையத்திற்குச் செல்பவர்கள் Amazon.com.au என்ற அமேசனின் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை 1ம் திகிதியிலிருந்து இம்மாற்றம் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் வெளிநாடுகளிலிருந்து 1000 டொலர்களுக்கு மேல் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 10 வீத GST விதிக்கப்பட்டநிலையில், அதற்குக் குறைவான தொகை என்றாலும் வெளிநாட்டு நிறுவனங்கள் 10 வீத GST செலுத்த வேண்டுமென ஜுலை 1 முதல் சட்டமாற்றம் கொண்டுவரப்படுகிறது.

இந்தப்பின்னணியில் எதிர்வரும் ஜுலை1 முதல் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்ட தமது நிறுவனத்திலிருந்து ஆஸ்திரேலிய முகவரிகளுக்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்படமாட்டாது என அறிவித்துள்ள அமேசன் நிறுவனம், ஆஸ்திரேலியர்களுக்கென கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமேசன் இணைய நிறுவனத்தில் சுமார் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்கள் இருப்பதாகவும், இந்நிறுவனத்தினூடாக தேவையான பொருட்களை ஆஸ்திரேலியர்கள் கொள்வனவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now