SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்து தேர்தல்: Premier Palaszczuk சாதனை படைக்கிறார்

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் தற்போதைய Premier Annastacia Palaszczuk அவர்கள் மூன்றாவது முறையாக லேபர் ஆட்சியைத் தக்கவைத்து சாதனை படைக்கிறார்.

Queensland Premier Annastacia Palaszczuk is seen giving her victory speech to supporters at The Blue Fin Fishing Club in Brisbane, Saturday, October 31, 2020.
Queensland Premier Annastacia Palaszczuk is seen giving her victory speech to supporters at The Blue Fin Fishing Club in Brisbane, Saturday, October 31, 2020. Source: AAP

2 min read

Published

By Raysel


Skip to article content

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் நாடாளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் தற்போதைய Premier Annastacia Palaszczuk அவர்கள் மூன்றாவது முறையாக லேபர் ஆட்சியைத் தக்கவைத்து சாதனை படைக்கிறார்.

மேலும் குயின்ஸ்லாந்து மாநில சட்டப்படி நான்கு ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும், இடையில் தேர்தல் நடத்த இயலாது என்பதால் Premier Annastacia Palaszczuk இன்னும் நான்கு ஆண்டுகள் பதவியில் தொடர்ந்தால் அவர்  குயின்ஸ்லாந்து மாநில அரசியல் வரலாற்றில் மிக நீண்ட ஆண்டுகள் Premier பதவி வகித்தவர்களில் ஒருவர் எனும் பெருமையையும், அதிக ஆண்டுகள் Premier பதவி வகித்த பெண் என்ற சாதனையையும் படைப்பார்.    

மொத்தமுள்ள 93 இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 47 இடங்கள் தேவை. ஆளும் கட்சியான லேபர் கட்சி பெரும்பான்மை இடங்களையும் தாண்டி அமோக வெற்றி பெறும் என்று ABC ஊடகம் வெளியிட்டிருக்கும் கணிப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக லேபர் கட்சி 52 இடங்கள் வரை பெறக் கூடும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றிபெற்ற லேபர் கட்சி இம்முறை 52 இடங்கள் வரை வென்றால் அது அமோக வெற்றியாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.

 

அதே வேளையில் Deb Frecklington தலைமையில் தேர்தலை சந்தித்த எதிர்கட்சியான Liberal National Party (LNP) இம்முறை 32 இடங்களை மட்டுமே பெறலாம் என்றும் ABC ஊடகம் வெளியிட்டிருக்கும் கணிப்பு தெரிவிக்கிறது.  எதிர்கட்சியான LNP கட்சி கடந்த நாடாளுமன்றத்தில் 39 இடங்களைக் கொண்டிருந்த நிலையில் அந்த கட்சி 7 இடங்களை இழந்தால் அது பெரும் தோல்வியாக பார்க்கப்படலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். LNP கட்சியின் தோல்வியை தாம் ஏற்றுக்கொள்வதாக Deb Frecklington கூறியுள்ளார். மேலும், தாம் தொடர்ந்தும் கட்சியின் தலைவராக தொடரவும் விருப்பம் வெளியிட்டுள்ளார். ஆனால் கட்சியினர் அதை விரும்புவார்களா என்பது கேள்விக்குறியே என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.     

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் LNP கட்சி கண்டிருக்கும் தோல்விக்கு உள்கட்சி துரோகங்களே காரணம் என்று நாட்டின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் Paulin Hanson அவர்களின் One Nation கட்சி பெற்ற வாக்குகளோடு இம்முறை அக்கட்சி பெற்றிருக்கும் வாக்குகளை ஒப்பிட்டால் குறைந்தது 6.8 சத வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளது என்பதாக வந்துகொண்டிருக்கும் முடிவுகள் காட்டுகிறது. Paulin Hanson அவர்களின் One Nation கட்சி பல தொகுதிகளில் வெல்ல இயலாமற்போனாலும், இக்கட்சி தனக்கு கிடைக்கும் வாக்குகளை தனக்கு அடுத்தப்படி விருப்பு அடிப்படையில் (preference) எதிர்கட்சியான LNP கட்சிக்கு வழங்குவதால் எதிர்கட்சியான LNP கட்சி இம்முறை சில இடங்களை அதிகமாக  கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை என்பதால் எதிர்கட்சியான LNP கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலவில்லை என்று பார்க்கப்படுகிறது.

ஆளும் லேபர் கட்சிக்கு இம்முறை கிடைத்திருக்கும் ஒரு அதிர்ச்சி மிக்க தோல்வி லேபர் கட்சியின் South Brisbane தொகுதி வேட்பாளர் Jackie Trad அடைந்திருக்கும் தோல்வி. அவர் கிரீன்ஸ் கட்சி வேட்பாளர் Amy MacMahon யிடம் தோற்றுப்போனார். Jackie Trad முன்னாள் துணை ப்ரீமியராக பதவி வகுத்துவந்தவர்; சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வர் நியமனம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகுவதாக அறிவித்தவர்.                      


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now