SKIP TO MAIN CONTENT

இன்னுமொரு தமிழ் அகதி உயிரை மாய்த்துக் கொண்டார்

புகலிடம் தேடி இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வந்திருந்த நல்லதம்பி வசந்தகுமார் என்பவர் தனது நாற்பத்தி ஐந்தாவது பிறந்த நாள் அன்று தனது உயிரை மாய்த்துள்ளார்.

Nallathamby Vasanthakumar
Nallathamby Vasanthakumar Source: SBS Tamil

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த வசந்தகுமார், நௌறூ தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்து, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர், பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் அவர்கள், மருத்துவ மனையிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அதனால், அவர் மூளைச்சாவடைந்துள்ளார்.  சிகிச்சைகள் பலனளிக்காது என்று மருத்துவர்கள் முடிவெடுத்த பின்னர், அவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நேற்று மாலை 5:45 மணியளவில் நல்லதம்பி வசந்தகுமார் உயிரிழந்தார்.

வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த வசந்தகுமாருக்கு நான்கு பெண்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களோ அல்லது உங்களது அன்புக்குரிய ஒருவரோ மனச்சோர்வடைந்தால் அல்லது தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு ஒருவர் தேவைப்பட்டால், beyondblue (1300 22 4636) அல்லது Lifeline (13 11 14) ஆகிய அமைப்புகளைத் தொடர்பு கொள்ளவும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now