நாட்டில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்று பெரும்பான்மை அரசை அமைக்கும் Anthony Albanese அவர்கள் முதல் ஆட்சி காலத்தைவிட இரண்டாவது முறையாக அதிக பெரும்பானமையுடன் ஆட்சி அமைக்க உள்ளார்.
பிரதமராகப் பணியாற்றுவது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம் என்று பிரதமர் Anthony Albanese இன்று இரவு சிட்னியில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது கூறினார்.
"ஆழ்ந்த மனத்தாழ்மையுடனும், ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் இன்றிரவு நான் செய்யும் முதல் அம்சம் என்னவெனில், பூமியின் சிறந்த தேசமான ஆஸ்திரேலியாவிற்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பை தந்த மக்களுக்கு 'நன்றி' தெரிவிப்பதாகும்." என்று தனது வெற்றி உரையில் பிரதமர் Anthony Albanese குறிப்பிட்டார்.
"இன்று, ஆஸ்திரேலிய மக்கள் ஆஸ்திரேலிய விழுமியங்களுக்கு வாக்களித்துள்ளனர்: அனைவருக்கும் நியாயம், அனைவரின் இலட்சியங்கள் நிறைவேறும் வாய்ப்பு எனும் விழுமியங்களுக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். ஆஸ்திரேலியர்கள் இந்த விழுமியங்களுக்கு உண்மையாக இருக்கும் எதிர்காலத்திற்காகவும், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் எதிர்காலத்திற்காகவும் வாக்களித்துள்ளனர்." என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால் பல மாநிலங்களில் லேபர் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. எனவே லேபர் கட்சி கடந்த தேர்தலைவிட இம்முறை அதிக இடங்களை வென்று பெரும்பான்மை அரசை அமைக்கிறது.
லிபரல் கட்சியிடம் இருந்த சில இடங்களில் இம்முறை லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதில் ஓன்று லிபரல் கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான பீட்டர் டட்டன் அவர்கள் போட்டியிட்ட டிக்சன் தொகுதியாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள இந்த தொகுதியில் பீட்டர் டட்டன் அவர்கள் தோல்வி கண்டு லேபர் கட்சியின் Ali France அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். பீட்டர் டட்டன் தோல்வி கண்டதன்மூலம் ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக எதிர்கட்சி தலைவர் தனது தொகுதியில் தோல்வி கண்டுள்ளார்.

Australian Liberal Party leader Peter Dutton, third left, stands with his family as he makes his concession speech following the general election in Brisbane. Source: AP / Pat Hoelscher/AP
"இந்த பிரச்சாரத்தின் போது நாங்கள் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை, இன்றிரவு அது தெளிவாகத் தெரிகிறது," என்று அவர் கூறினார். "நமது நாட்டிற்கும் ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் சிறந்ததையே நான் எப்போதும் விரும்பினேன். லேபர் கட்சிக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை மக்கள் தந்துள்ளனர், அதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்." என்று பீட்டர் டட்டன் அவர்கள் கூறினார்.
லேபர் கட்சி பல கொள்கைகளை இந்த தேர்தலின்போது முன்வைத்தது. குறிப்பாக childcare குழந்தை பராமரிப்புக்கு ஆகும் செலவுக்கு அதிக மானியம் தருதல், Medicare எனப்படும் திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் supermarkets எனப்படும் பல்பொருள் அங்காடிகள் தாறுமாறாக விலையை ஏற்றுவதை சட்டவிரோதமாக்குதல், மருத்துவர்கள் bulk bill எனும் முறையில் நோயாளிகளைப் பார்க்கும் வகையில் மருத்துவர்களுக்கு அதிக நிதி வழங்கும் வகையில் medicare திட்டத்திற்கு இன்னும் அதிகமாக சுமார் $9 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குதல், முதன் முதலாக வீடு வாங்குபவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட அரசு 10 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குதல், சோலார் மூலம் மின்சாரம் பெரும் வீடுகளுக்கு பேட்டரி வாங்க $2.3 பில்லியன் டாலர் நிதி என்று லேபர் கட்சி பல திட்டங்களை அறிவித்துள்ளது.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Anthony Albanese wins a second term as Australian Prime Minister as Labor secures a majority government
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.