Latest

UK-வில் குடியேற்றத்திற்கு எதிரான கலவரங்கள்- தவறான தகவல் வன்முறையை எப்படி தூண்டியுள்ளது?

சந்தேகத்திற்குரிய Southport கொலையாளியை முஸ்லீம் குடியேறி என்று தவறாக அடையாளம் காட்டும் சமூக ஊடக இடுகைகள் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு வன்முறையைத் தூண்டியுள்ளன, இது தவறான தகவலின் மோசமான விளைவுகளை நிரூபிக்கிறது.

'Enough Is Enough' Rally In Sunderland

Far-right activists hold an 'Enough is Enough' protest in Sunderland, England after misinformation circulated online. Credit: Drik/Getty Images

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள கருப்பொருள்கள் மற்றும் படங்கள் சில வாசகர்களுக்கு வருத்தமளிக்கக்கூடும்.

Southport கத்திக்குத்து தாக்குதலின் சந்தேக நபர் ஒரு முஸ்லீம் குடியேறி என்று சமூக ஊடக பதிவுகள் பொய்யாக கூறியதை அடுத்து, குடியேற்ற எதிர்ப்பு கலவரங்கள் UK முழுவதும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன.

6, 7 மற்றும் 9 வயதுடைய மூன்று சிறுமிகள், ஜூலை 29 அன்று Southport Merseyside நகரத்தில் Taylor Swift-themed நடன வகுப்பில் கொல்லப்பட்டனர். மேலும் எட்டு பிள்ளைகள் மற்றும் இரண்டு பெரியவர்களும் காயமடைந்தனர்.

17 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள், 10 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டார். அவரது வயது காரணமாக, அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.

ஆனால் சந்தேக நபரின் அடையாளம் குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் விரைவாக பரவத் தொடங்கின, அவரின் பெயர் Ali-Al-Shakati என்றும், அவர் 2023-இல் படகு மூலம் UK வந்தவர் என்றும் அந்த தகவல் தெரிவித்தது.

இந்த சம்பவம் நடந்த பிறகு Southport சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒரு செவ்வாய்க்கிழமை கூடினர். ஆனால் அன்று மாலையில் கலவரம் வெடித்தது.t

உள்ளூர் மசூதி ஒன்று சேதமாக்கப்பட்டது மற்றும் வன்முறையில் 53 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

அப்போதிருந்து, குடியேற்ற எதிர்ப்பு கலவரங்கள் UK முழுவதும் பரவியுள்ளன, அந்த வார இறுதியில் 370-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அமைதியின்மைக்கு பதிலளிக்கும் வகையில் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற உத்தரவு நீக்கப்பட்டது, மேலும் சந்தேக நபர் Axel Rudakubana என அடையாளம் காணப்பட்டார்.

இந்த பதின்மவயதினர் Cardiff நகரில் ருவாண்டா பெற்றோருக்குப் பிறந்தவர், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் அல்ல.

அவரது தவறான அடையாளம் "தீங்கு விளைவிக்கும் நெறிமுறைகள் மற்றும் தப்பெண்ணங்களை" நிலைநிறுத்தியுள்ளது மற்றும் இஸ்லாமோஃபோபியாவைத் தூண்டியது என்று இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புப் பதிவேடு ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நோரா அமாத் கூறுகிறார்.

"இதன் விளைவாக, சவுத்போர்ட் மசூதியும், மற்றைய மசூதிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் மற்றும் பல்கலாச்சார சமூகங்கள் இதனால் பயந்துள்ளனர்."

தவறான தகவல்களை பரப்புவது யார்?

இந்த சம்பவத்துடன் புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாம் சமூகத்தை தவறாக இணைக்கும் தவறான தகவல்களை இணையத்தில் பரப்புவதன் மூலம் பிரபல நபர்கள் வளர்ந்து வரும் அமைதியின்மையைத் தூண்டியுள்ளனர்.

தீவிர வலதுசாரி பிரச்சாரகரும், English Defence League-இன்(EDL) இணை நிறுவனருமான Tommy Robinson, கத்திக்குத்துத் தாக்குதல் "இஸ்லாம் அமைதிக்கான மதம் என்பதை விட மனநலப் பிரச்சினை என்று கூறுவதற்கு அதிக ஆதாரம்" என்று கூறியுள்ளார்.

தன்னை X தளத்தில் பின்தொடரும் சுமார் 900,000 பேரை அவர் கலவரத்தில் சேர ஊக்குவித்துள்ளார்.

செவ்வாயன்று சவுத்போர்ட்டில் கலவரம் செய்தவர்களில் EDL-இன் உறுப்பினர்களும் இருப்பதாக Merseyside காவல்துறை உறுதிப்படுத்தியது.
Protest In Southport Sparked By Rumours Of Stabbing Suspect's Identity
Riot police hold back protesters after disorder broke out on July 30, 2024 in Southport, England. Credit: Getty Images
X தளத்தில் 9.8 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட தன்னை பெண் வெறுப்பாளர் என்று அறிவித்துக்கொண்டுள்ள Andrew Tate, சந்தேக நபர் "படகில் வந்த" ஒரு "சட்டவிரோத குடியேறி" என்று கூறியுள்ளார்.

@iamyesyouareno உட்பட மற்ற குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான X பயனர்கள் தவறான தகவலை பரப்புகின்றனர், சந்தேக நபரின் அடையாளத்தை "Ali-Al-Shakati" என்றும் "அவர் MI6 கண்காணிப்பு பட்டியலில் இருந்தார்" என்றும் பொய்யாக கூறினர்.

"அவர் சமுதாயத்திற்கு ஆபத்து என்று அரசு அறிந்திருந்தது, ஆனால் எதுவும் செய்யவில்லை. பைத்தியக்காரன்" என்று அவர்கள் எழுதினர்.
கத்திக்குத்துத் தாக்குதல் மற்றும் அது குறித்த தவறான தகவல் பரவல் "இது குறித்த சித்தாந்தத்தில் உள்ள அனைத்து மக்களிடம் " உணர்ச்சிபூர்வமான பதிலைத் தூண்டியது என்று குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் Timothy Graham, SBS Examines-இடம் தெரிவித்தார்.

அவர் UK அரசியல்வாதியான Nigel Farage-ஐ சுட்டிக்காட்டுகிறார், அவர் கத்திக்குத்து தாக்குதலை "பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல" என்று விவரிக்கும் போது காவல்துறை அதிகாரிகள் பொய் சொல்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
"ஏற்கனவே எல்லாவற்றையும் தயாராக வைத்திருக்கும் மற்றும் குறிப்பிட்ட பிரச்சனைகள் பற்றி ஏற்கனவே மிகுந்த அக்கறை கொண்ட நபர்களின் குறிப்பிட்ட குழுக்களை ஒளிரச் செய்யும் அனைத்து சமிக்ஞைகளையும் இந்த தவறான தகவல் அனுப்புகிறது."

கலவரங்களுக்கு தவறான தகவல் ஒரு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அது மட்டும் பங்களிப்பு காரணி அல்ல என்றார் இணை பேராசிரியர் Graham.

"உலகில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டு மக்கள் வருத்தப்படுகிறார்கள், ஒரு சிறிய பகுதி மக்கள் மட்டுமே அதீத செல்வத்தை வைத்திருக்கும் தீவிர கட்டமைப்பு சமத்துவமின்மை உள்ளது மற்றும் நிறைய பேர் வாழ்க்கைச் செலவில் போராடுகிறார்கள், மேலும் பிரித்தானியாவில் அரசியல் அவநம்பிக்கை அதிகம். "
Protest In Southport Sparked By Rumours Of Stabbing Suspect's Identity
Riot police hold back protesters after disorder broke out on July 30, 2024 in Southport, England. Credit: Getty Images

முஸ்லிம் சமூகங்கள் மீதான தாக்கம்

UK பிரதமர் Keir Starmer கலவரங்களைக் கண்டித்தாலும், அவர் இன்னும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு என்று முத்திரை குத்தவில்லை.

வெள்ளிக்கிழமை, சவுத்போர்ட் மசூதிக்கு வெளியே இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையைப் வசித்தனர்.
Southport incident
Southport Islamic Centre Mosque chairman Imam Sheik Ibrahim Hussein addressed rioting in the community. Credit: James Speakman/PA
"இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பின் அளவுகள் நம் சமூகத்தை சீர்குலைப்பதை அனுமதிக்கக் கூடாது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"எங்கள் சமூகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் வெட்கமின்றி முயற்சிக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதில் எங்கள் துயரத்தில் ஐக்கியப்பட்டு, உறுதியுடன் நாங்கள் இன்று இங்கு நிற்கிறோம்."
People demonstrate to defend Liverpool mosque from the threat of far-right attacks
Anti-racism protesters make heart signs during a demonstration at the Abdullah Quilliam Mosque in Liverpool. Source: EPA / Adam Vaughan/EPA
இந்த தவறான தகவலின் விளைவுகள் ஆஸ்திரேலியாவிலும் உணரப்படுகின்றன.

"துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவங்கள் உலக அளவில் எதிரொலிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக முஸ்லீம் பெண்களை கண்கூடாக அடையாளம் காண்பதில்" என்று டாக்டர் Amath கூறினார்.

பல முஸ்லிம் பெண்கள் பொது வெளியில் இருக்க பயப்படுகிறார்கள் என்றார்.

"துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற தவறான தகவல்களின் பாரிய, வன்முறை விளைவுகளை நாங்கள் கண்டிருக்கிறோம்."

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Rachael Knowles, Selvi
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand