SKIP TO MAIN CONTENT

ANZ வங்கியில் தொழில்நுட்ப கோளாறு - 200 டாலர்களுக்கு மேல் எடுக்க இயலாது

ANZ வங்கியின் வாடிக்கையாளர்களால் அவ்வங்கியின் ATMயிலிருந்து 200 டாலர்களுக்கு மேல் எடுக்க முடியாமல் உள்ளது.

ANZ ATM
Source: ABC Australia

1 min read

Published

By Selvi

Source: ABC Australia



Skip to article content

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே  தங்களது வாடிக்கையாளர்கள் 200 டாலர்களுக்கு மேல் எடுக்க முடியாமல் உள்ளது என்று ANZ வங்கி உறுதி செய்துள்ளது.  இதனை நிவர்த்தி செய்ய தங்களது தொழில்நுட்பவியலாளர்கள் விரைந்து பணியாற்றி வருவதாக ANZ தெரிவித்துள்ளது.

Phone banking, internet banking, EFTPOS மற்றும் மற்றைய ஆன்லைன் பண பரிவர்த்தனை தளங்களிலும்(Apple Pay, Grow by ANZ, goMoney and ANZ App) 200 டாலர்கள் மட்டுமே எடுக்க முடியும்.

இதனால்  அசௌகரிகளுக்கும் இன்னல்களுக்கு ஆளான ANZ வாடிக்கையாளர்கள், ANZன்  Facebook மற்றும் Twitter போன்ற வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now