நாடு முழுவதிலுமுள்ள தமது வங்கியின் 19 கிளைகளை இந்த வருடம் மூடுவதாக ANZ வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து நேரடியான சேவைகளைப் பெறுவதிலும் பார்க்க, வங்கியின் இணையவழி சேவைகளை அதிகம் விரும்புவதால், தங்களது வங்கி இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக ANZ வங்கியின் தேசிய மேலாளர் தெரிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் தஸ்மேனியா மாநிலங்களிலேயே இந்தக் கிளைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படவுள்ள ANZ கிளைகளின் முழுமையான விவரம் வருமாறு -
NSW: Ashfield, Maroubra Junction, Erina Fair, East Maitland, Crows Nest, St Leonards, Engadine, Kiama, Chifley Square, Potts Point, Springwood
Queensland: West End
South Australia: Campbelltown
Victoria:Torquay, Reservoir, Collingwood, Hampton, Port Melbourne:
Tasmania: Sandy Bay
ANZ வங்கிக்கிளைகள் இவ்வாறு மூடப்படுவதால் சுமார் 105 பணியாளர்கள் பாதிக்கப்படவுள்ளார்கள் என்றும் அவர்கள் தொடர்ந்து வேலையைப்பெற்றுக்கொள்வதற்கான ஊக்குவிப்பினை வங்கி பொறுப்போடு மேற்கொள்ளும் என்றும் ANZ அறிவித்துள்ளது.
