Apple, Facebook, Google ஆகிய நிறுவனங்கள் 2018 - 2019 ஆம் ஆண்டு நிதியாண்டில் தங்களது ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிமிருந்து ஆயித்து நூறு கோடி டொலர்களை வருமானமாக ஈட்டியிருக்கின்றன. அந்த தொகைக்கு 21 கோடி அறுபது லட்சம் டொலர்களை company வரியாக செலுத்தியிருக்கின்றன என்று ஆஸ்திரேலிய வரித்திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நிதியாண்டியில் Apple நிறுவனம் ஈட்டிய 960 கோடி டொலர் மொத்த வருமானத்தில் 49 கோடி 80 லட்சம் டொலர்கள் வரி செலுத்தவேண்டிய வருமானம் என்றும் அதற்கு 14 கோடி 93 லட்சம் டொலர்களை Apple நிறுவனம் வரியாக செலுத்தியுள்ளதாக வரித்திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
Google நிறுவனம் கடந்த நிதியாண்டியில் ஈட்டிய நூறு கோடி டொலர் மொத்த வருமானத்தில் 20 கோடி மூன்று லட்சம் டொலர்கள் வரிக்குரிய வருமானம் என்றும் அதில் ஐந்து கோடி 14 லட்சம் டொலர்களை வரியாக செலுத்தியது என்றும், Facebook நிறுவனம் கடந்த நிதியாண்டியில் ஈட்டிய 58 கோடி 82 லட்சம் டொலர் மொத்த வருமானத்தில் 5 கோடி 14 லட்சம் டொலர்கள் வரிக்குரிய வருமானம் என்றும் அதில் ஒரு கோடி 54 லட்சம் டொலர்களை வரியாக செலுத்தியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
