Apple சாதனங்களில் தரவிறக்கம் செய்யப்படுகின்ற செயலிகள் பயனாளர்களை வேவு பார்க்கின்றனவா என்பது குறித்து பயனாளர்களை எச்சரிப்பதற்கு, தனது புதிய மென்பொருள் மேம்படுத்தல் (software update) வெளியீட்டில் Apple நிறுவனம் வழியை ஏற்படுத்தியிருக்கிறது.
உங்களது Apple தொலைபேசியை காணொளி தொடர்பாடலுக்காக பயன்படுத்தாத நேரத்தில், ஏதாவது செயலி இரகசியமாக காணொளி மூலம் உளவு பார்த்தால், உங்களது தொடுதிரையின் வலது பக்க மேல் மூலையில் சிறிய பச்சை விளக்கும், ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்தால் மென்சிவப்பு நிற விளக்கும் எரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apple நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள iOS14 எனப்படுகின்ற மென்பொருள் மேம்பாட்டுப்பொதியை தரவிறக்கம் செய்துகொண்ட Apple சாதனங்களில் மாத்திரமே இந்தப்பாதுகாப்பு சாத்தியம் என தெரிவிக்கப்படுகிறது.
