SKIP TO MAIN CONTENT

ஆறு வகையான குப்பை வாளிகளை பயன்படுத்த நீங்கள் தயாரா?

bin
Source: peakpx

1 min read

Published


Skip to article content

விக்டோரியா மாநிலத்தில் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதில் நிலவும் நெருக்கடியைச் சமாளிக்க 6 வகையான bin- குப்பை வாளிகளை அறிமுகம் செய்யும் முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Infrastructure Victoria அமைப்பின் பரிந்துரையின்படி organics, plastic, paper, card, glass, metal  ஆகிய கழிவுகளை தனித்தனியே போடுவதற்கென 6 வெவ்வேறு குப்பைவாளிகளை பயன்படுத்துவதன் மூலம் மீள்சுழற்சி செயற்பாட்டினை வினைத்திறனுடையதாக மாற்ற முடியும் என குறிப்பிடப்படுகிறது.

தற்போது விக்டோரியா மாநிலத்தில் 3 வகையான குப்பை வாளிகளை மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

எனினும் விரைவில் விக்டோரியாவாழ் மக்கள் ஆகக்குறைந்தது 4 வகையான கழிவுகளை போடுவதற்கென வெவ்வேறு வாளிகளைப் பயன்படுத்தும் நிலை வரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் மிகப்பெரிய மீள்சுழற்சி நிறுவனமான SKM முடங்கியதையடுத்து, மாநிலத்தின் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் செயற்பாடு கடும் சவால்களை சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now