Tigerair நிறுவனம் தொடர்ந்து ஆறாவது வருடமாக பயணிகளின் அதிக முறைப்பாடுகளுக்கு முகங்கொடுக்கின்ற விமானசேவையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் பயணிகள் சேவைத்தரப்படுத்தும் நிறுவனமான Airline Customer Advocate (ACA) உள்ளூர் விமான சேவைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் விமான சேவையான Regional Express மற்றும் Qantas, Virgin Australia, Jetstar ஆகியவற்றின் மத்தியில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
Tigerair விமானசேவை தொடர்ச்சியாக தாமதமான தனது பறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சேவைகளை ரத்துச்செய்வதும் அதற்குரிய பணத்தை மீளளிப்பதில் காண்பிக்கும் தாமதமும்தான் பயணிகள் அதிருப்தியடைவதற்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Virgin Australia விமானசேவை பயணப்பைகள் விடயத்தில் மிகமோசமான விமானசேவையாக பயணிகளால் கருத்துக்கூறப்பட்டுள்ளது.
Tigerair விமானசேவையில் 2017 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 45 லட்சத்து 98 ஆயிரத்து 673 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குறைந்த விலையில் விமான சேவையயை வழங்கும் மிக முக்கியமான நிறுவனம் Tigerair என்பது குறிப்பிடத்தக்கது.
