SKIP TO MAIN CONTENT

அரசுக்கு எதிரான 'Right to Know' பிரச்சாரத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!

Right to Know campaign at SBS Melbourne office
Right to Know campaign at SBS Melbourne office, 21 Oct 2019 Source: SBS

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவில் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயற்படுவதாகத் தெரிவித்து மேற்கொள்ளப்படும் Right to Know பிரச்சாரத்தில் SBS உள்ளிட்ட தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்கள் பலவும் இணைந்துகொண்டன.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நாளிதழ்கள் பல தமது முகப்பு பக்கங்களை கறுப்பாக்கி வெளியிட்ட அதேநேரம் அரசாங்கம் மக்களிடமிருந்து என்னென்ன இரகசியங்களை மறைத்துள்ளது என்ற கேள்வியைக் கேட்கும் வாசகங்கள் பல ஊடகங்களில் வெளியாகின.

ABC ஊடகத்தின் அலுவலகங்களையும், News Corp செய்தியாளரின் வீட்டையும் பொலிஸார் சோதனையிட்டதைத் தொடர்ந்து, சில செய்தியாளர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பின்னணியில் அரசுக்கு எதிராக Right to Know பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்தப்பின்னணியில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள செய்தியாளர்களின் நிலை தொடர்பில் பிரதமர் ஸ்கொட் மொறிசன் விளக்கமளிக்க வேண்டுமெ எதிர்கட்சித் தலைவர் அந்தனி அல்பனீசி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் சட்டத்தின் அடிப்படையில் இவ்விடயம் கையாளப்படுவதே சரியானது என்று கூறினார். 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now