SKIP TO MAIN CONTENT

அரசுக்கு கடன் செலுத்தவேண்டியவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை: சட்டத்தோடு வருகிறார் Morrison!

Scott Morrison
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

அரசாங்கத்துக்கு மீளளிக்கவேண்டிய கடனை திருப்பிச்செலுத்தாதவர்களின் வெளிநாட்டுப்பயணங்களுக்கு தடைபோடும் புதிய சட்ட மூலத்தை பிரதமர் Scott Morrison கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Centrelink மற்றும் ATO ஆகிய அரச நிறுவனங்களுக்கு செலுத்தவேண்டிய சுமார் 800 மில்லியன் டொலர் நிதி இன்னமும் நிலுவையில் உள்ளது. அவற்றை மீளச்செலுத்தவேண்டிய சுமார் ஒன்றரை லட்சம் ஆஸ்திரேலியர்கள் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அரசாங்கத்தினை ஏமாற்றி வருகிறார்கள்.

அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய பணத்தை தவணைமுறையில் செலுத்துவதற்கான ஒப்பந்தத்திற்காவது உடன்படாதவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை போடுவதே சரியான வழியாக இருக்கும் என்று Scott Morrison தெரிவித்திருக்கிறார்.

நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படும் கடனாளிகளுக்கு எதிராக தான் மேற்கொள்ளவுள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான அரச கடனாளிகள் 20 பேருக்கு எதிராக ஏற்கனவே பயணத்தடை கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் ஆஸ்திரேலியாவின் பொருளதாரத்தின் வயிற்றலடிக்கும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பாக அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளையே எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now