SKIP TO MAIN CONTENT

ஆஸி கிரிக்கெட் வீரரருக்கு லண்டனில் ஐந்து வருட சிறை!

Alex Hepburn (left) is led out of Hereford Crown Court after being jailed for five years for raping a woman he found 'dozing' in his team-mate's bedroom (AAP)
Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்து கழக அணியொன்றுக்காக விளையாடிய Alex Hepburn என்ற 23 வயது ஆஸ்திரேலிய வீரர் தனது நண்பர்களோடு Wahtsapp-இல் விடுத்த சவாலுக்கிணங்க பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் வன்புணர்வு கொண்டார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் இடம்பெற்ற சம்பவத்தில், Alex Hepburn இருட்டில் தனது சக அணி வீரரின் தோழியுடன்  உறவுகொண்டார் என்றும் குறிப்பிட்ட பெண்ணும் தன்னோடு உறவு கொள்பவர் தனது காதலர் என்ற நினைப்பிலிருந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தான் வேறொருவருடன் உறவுகொண்டதை பின்னர் தெரிந்துகொண்டதையடுத்து, குறிப்பிட்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவத்தை குறிப்பிட்ட பெண் தனது நண்பிக்குக் கூறியதுடன் நீதிமன்றத்துக்கும் எடுத்துச்சென்று தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகவும் தான் ஏமாற்றப்பட்டு வல்லுறவு கொள்ளப்பட்டதாகவும் முறையிட்டார்.

இந்த விநோதமான வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நீதிமன்றில் விசாரணைக்குள்ளாகி ஜூரிவரை சென்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now