நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்ட வீராங்கனை Hayley Jensen தனது நீண்ட நாள் காதலியான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை Nicola Hancock-இனை இம்மாத ஆரம்பத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற தங்களது திருமணம் குறித்த செய்தியை இருவரும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி வீராங்கனை Hayley Jensen (வயது 26) நியூசிலாந்து தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக எட்டு ஒரு நாள் போட்டிகளையும் ரி20 போட்டிகளில் 20 ஆட்டங்களிலும் விளையாடியவர். மெல்பேர்னை சேர்ந்த 23 வயதுடைய Nicola Hancock ஆஸ்திரேலியாவில் பல்வேறு கழக மட்டப்போட்டிகளில் விளையாடுபவர்.
இரண்டு வீராங்கனைகளும் கடந்த நான்கு வருடங்களாகவே உறவிலிருந்து கடந்த வருடம் திருமணம் செய்துகொள்வதற்கான நிச்சயதார்த்தத்தினை மேற்குலக முறைப்படி நிறைவுசெய்துகொண்டு கடந்த 12 ஆம் திகதி பிறிஸ்பனில் தங்களது திருமணத்தை குடும்பத்தினர், உறவினர்களுடன் மிகச்சிறியளவில் நடத்திக்கொண்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nicola Hancock தனது இணையான Hayley Jensen-இன் தகப்பனது பெயரை தன்னுடைய பெயருடன் இணைத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கிரிகெட் அணி வீராங்கனைகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளும் நான்காவது ஜோடி இதுவாகும்.
