ஆஸ்துமா நோயாளிகள் வைட்டமின் D மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது, Asthma attack-ஆஸ்துமா தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
955 ஆஸ்துமா நோயாளிகளிடம், பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினடிப்படையில் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 955 பேரில், வைட்டமின் D மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள், ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 50 சதவீதத்தால் குறைவடைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஆஸ்துமா தடுப்பு மருந்துகளுக்கான மாற்றீடாக வைட்டமின் D-ஐக் கருதமுடியாது என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
