SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அகதிகளை குடியமர்த்துவதற்கான நியூசிலாந்தின் அழைப்புக்கு என்ன நடந்தது?

AAP
Source: AAP

2 min read

Published

Updated

By Renuka.T



Skip to article content

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 300 அகதிகளை தமது நாட்டில் குடியமர்த்த தயாராக உள்ளதாக அண்மையில் நியூசிலாந்து அறிவித்திருந்தது.

குறிப்பாக நவுறு மற்றும் பப்புவா நியூகினியில் பல நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில்  300 அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து முன்வந்திருந்தது.

முன்னாள் பிரதமர் ஜுலியா கிலாட் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த அழைப்பை நியூசிலாந்து விடுத்திருந்தது.

எனினும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ ஆஸ்திரேலியா முன்வரவில்லை என்பதால் 300 ஆஸ்திரேலிய அகதிகளை தமது நாட்டில் குடியமர்த்த முடியாதுள்ளதாக நியூசிலாந்து குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.

தற்போது இந்த 300 இடங்களும் சிரிய அகதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆஸ்திரேலிய அரசு தம்மை ஒருபோதும் நாட்டில் குடியமர்த்தாது என்பதால் நியூசிலாந்து அரசு தம்மை எப்படியாவது ஏற்றுக்கொள்ள வேண்டுமென நவுறு மற்றும் பப்புவா நியூகினியிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

New Zealand has confirmed it is unable to accept refugees from Nauru and Manus Island this year, citing reluctance from the Australian Government.

New Zealand had offered to resettle 300 refugees from the processing centres as part of a two-year deal with Australia signed in 2013 by former prime minister Julia Gillard.

The plan had been proposed to begin in 2014, with the annual resettlement of 150 refugees contributing to New Zealand's overall intake of 750 places each year.

But a spokesperson for the New Zealand immigration minister Michael Woodhouse said Australia has not taken up the offer and the resettlement places had instead been given to Syrian refugees.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now