ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட மனுஸ் அகதி பிரிஸ்பனில் மரணம்!

Sayed Mirwais Rohani died by suicide on Tuesday.

Sayed Mirwais Rohani died by suicide on Tuesday. Source: Supplied

மனுஸ் தீவிலிருந்து இரண்டுவருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆப்கான் அகதி ஒருவர் பிறிஸ்பனில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் Sayed Mirwais Rohani (32) என்று உள்துறை அமைச்சு உறுதிசெய்துள்ளது.

நான்கு வருடங்களாக மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த Sayed Mirwais Rohani 2017 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக பிறிஸ்பனுக்கு கொண்டுவரப்பட்டு சமூகத்தில் இணைந்துவாழ (community detention) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சீனாவில் மருத்துவப்படிப்பை முடித்த Sayed Mirwais Rohani பயிற்றப்பட்ட வைத்தியவர் ஆவார். மனுஸ்தீவிலிருந்தபோது அங்குள்ள வைத்தியசாலையில் இவர் மருத்துவராக பணிபுரிவதற்கு கோரியபோது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

இவரது குடும்பத்தினர் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்துவருகின்றனர். Sayed Mirwais Rohani ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட நாள் முதல் தனது குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் எதற்கும் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சு சாதகமாக பதிலளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மனுஸ் தீவு அகதி ஒருவரின் 7ஆவது தற்கொலை சம்பவம் இது என்று தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அகதிகள் நல அமைப்புகள், நீண்டநாள் தடுப்புமுகாம் வாழ்க்கை ஒருவருடைய மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இதுவென குறிப்பிட்டுள்ளன.

Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au.


1 min read

Published

Updated



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now