SKIP TO MAIN CONTENT

“ஆஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும்...!”

வடகொரியாவுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவை ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரித்தால் ஆஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது.

Defence ministers
Australian Defense Minister Marise Payne, Foreign Minister Julie Bishop in Seoul, South Korea Source: AP

1 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

வடகொரியாவுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவை ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரித்தால் ஆஸ்திரேலியா அழிவைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் தென்கொரியா சென்றிருந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop மற்றும் ராணுவத்துறை அமைச்சர் Marise Payne  ஆகியோர், அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் ஆஸ்திரேலியாவின் முழுமையான ஆதரவு உண்டு என்று கூறியிருந்தனர். ஆஸ்திரேலிய அரசின் வெளிப்படையான இந்த ஆதரவு வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருப்பதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து, வடகொரியாவின் வெளியுறவுத்துறை வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான K-C-N-A வழியாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் அரசியல் மற்றும் ராணுவ செயல்களை ஆஸ்திரேலியா ஆதரிப்பதன்மூலம், ஆபத்தான நிலைக்கு ஆஸ்திரேலியா செல்வதாக வடகொரியா ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளது.   

ஆனால் வடகொரியா எனும் அயோக்கியத்தனமான நாட்டின் பயமுறுத்தலைக்கண்டு தாம் கோழையாகி ஒதுங்கமாட்டோம் என்று ஆஸ்திரேலியாவின் Defence Personnel துறையின் அமைச்சர் Dan Tehan கூறினார்.    


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now