போலி விளம்பரங்களை தங்களது தளத்திலிருந்து களைவதற்கு அவற்றை காட்டித்தருமாறு Facebook நிறுவனம் ஆஸ்திரேலியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரபலங்களின் பெயர்களில் போலியான கணக்குளை வைத்திருப்பவர்கள் மற்றும் அந்த தளங்களை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவிசெய்யுமாறும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலி விளம்பரங்களை முறைப்பாடு செய்வதற்கு முகநூலில் வகை செய்யப்பட்ட வசதியானது பிரித்தானியாவில் சோதனை செய்யப்பட்டு அது வெற்றியடைந்திருப்பதை அடுத்து, தற்போது ஆஸ்திரேலியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பல்வேறு மோசடிகள் மூலம் சுமார் 10 கோடி டொலர்களை ஆஸ்திரேலியர்கள் இழந்திருக்கிறார்கள். இவற்றில் சுமார் ஒரு கோடி 80 லட்சம் டொலர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலிய நுகர்வோர் பாதுகாப்பு திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆகவே இது தொடர்பில் பாவனையாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுதன் மூலமே தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளமுடியம் என்று நிறுவன அதிகாரி Rob Leathern தெரிவிதுள்ளார்.
