ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுடன் விசா இன்றி எத்தனை நாடுகளுக்குச் செல்லலாம்?

அதிக பாதுகாப்பான கடவுச்சீட்டு எது? அதி விலை கூடிய கடவுச்சீட்டு எது? இந்திய பாஸ்ப்போர்ட்டுடன் விசா இன்றி எத்தனை நாடுகள் செல்லலாம்?

cc

Source: Getty

அதிக பாதுகாப்பான கடவுச்சீட்டு எது? அதி விலை கூடிய கடவுச்சீட்டு எது? இந்திய பாஸ்ப்போர்ட்டுடன் விசா இன்றி எத்தனை நாடுகள்  செல்லலாம்?

ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த அத்துடன்  மிகவும் பாதுகாப்பான கடவுச்சீட்டினை வழங்குகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் இடையேயான ஓர் ஒப்பீட்டினை இங்கே பார்ப்போம்.

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுகள் உலகில் பாதுகாப்பானவை எனக் கருதப்படுகின்றன, ஆனால் அவை உலகில் மிகவும் விலை உயர்ந்தவை. ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 171 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம்.

The Henley Passport Index சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதன் தரப்படுத்தலின்படி இந்திய கடவுச்சீட்டு 81வது இடத்திலுள்ளது. ஐவரி கோஸ்ட், செனகல் டோகோ ஆகியனவற்றில் கடவுச்சீட்டுகளும் அதே  81வது இடத்திலேயே உள்ளன. இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 56 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம்.

36 பக்கங்கள் கொண்ட 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய இந்திய பாஸ்போர்ட் ஒன்றைப் பெறுவதற்கான செலவு ரூ.1000 அல்லது AUD 20 ஆகும். உலகிலேயே விலை உயர்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டும் ஒன்றாகும். 2018 ஜனவரி 1ம் திகதிமுதல், 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஆஸ்திரேலிய கடவுசீட்டொன்றைப் பெற ஆகும் செலவு $282 ஆகும்.

உலகிலேயே அதி விலை கூடிய கடவுச்சீட்டு சிரியா நாட்டுடையதாகும். அங்கு யுத்தம் நடைபெறத்தொடங்கியதிலிருந்து வெளிநாடுகளில் சிரிய நாட்டு பாஸ்போர்ட் ஒன்றைப் பெறுவதற்கான செலவு சுமார் $500 ஆஸ்திரேலியா டாலர்களாகும். யுத்தத்துக்கு முன்னர் அதை பெறுவதற்கான செலவு வெறும் $11 ஆஸ்திரேலியா டாலர்கள் மட்டுமே.


Share

Published

By Praba Maheswaran

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand