கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தைப் பலரும் சந்தோஷமாக அனுபவிக்கும் அதேநேரம், மேற்கு ஆஸ்திரேலியாவில் பலர் தற்கொலை எண்ணத்துடன் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று சொல்கின்றது.
தனிமைப்படுத்தப்பட்டதான உணர்வு, இயலாமை போன்றவை பண்டிகைக் காலங்களில் அதிகமாக ஏற்படுவதே இதற்குக் காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் சாதாரண நாட்களை விட கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தில் ஒவ்வொரு 32 செக்கன்களுக்கும் ஒரு தொலைபேசி அழைப்பைத் தாம் எதிர்பார்ப்பதாக Lifeline WA தெரிவித்துள்ளது.
தற்கொலை எண்ணம், குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சினைகள், உடல்நலமின்மை மற்றும் உளவியல் பாதிப்புகள் தொடர்பிலேயே இந்த அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேநேரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் மட்டும் 55,000 அழைப்புகள் தற்கொலை எண்ணம் உள்ளவர்களிடமிருந்து வந்திருப்பதாகவும், அம்மாநிலத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்கொலை எண்ணம் மற்றும் உளவியல் சிக்கல்களால் அவதிப்படுபவர்கள் தயங்காமல் கீழ்க்காணும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- Lifeline on 13 11 14
- Kids Helpline on 1800 551 800
- MensLine Australia on 1300 789 978
- Suicide Call Back Service on 1300 659 467
- Beyond Blue on 1300 22 46 36
- Headspace on 1800 650 890
Share
