SKIP TO MAIN CONTENT

“ஆஸ்திரேலியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம்...”

“ஆஸ்திரேலியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம்...”

Missile
epa05910355 North Korean military vehicles carrying missiles. EPA/HOW HWEE YOUNG Source: EPA

1 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தரும் என்று பிரதமர் Malcolm Turnbull கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் அமெரிக்க துணை அதிபர் Mike Pence யுடன் உரையாடிய பின்னர் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய ஆதரவை பிரதமர் Malcolm Turnbull வெளிபடுத்தினார். முன்னதாக, வடகொரியா நாட்டினால் அணு குண்டு அச்சுறுத்தல் எழுந்திருப்பதையடுத்தும், சர்வதேச சட்டத்தின்படி வடகொரியா நடந்துகொள்ள மறுப்பதாலும் வடகொரியா மீது ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் Julie Bishop கூறியிருந்தார்.

 

ஆனால் வடகொரியாவை தனிமைப்படுத்த ஆஸ்திரேலியா நினைக்குமானால், ஆஸ்திரேலியா அமெரிக்காவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்குமானால், வடகொரியாவின் அணுகுண்டு இலக்கில் ஆஸ்திரேலியா இருக்கும் என்று வட கொரியாவின் வெளியுறவுத்துறை அறிவிப்பாளர் எச்சரித்தார். வடகொரியா நாடு அணு குண்டு சோதனை நடத்தும் என்ற யூகங்கள் வலுத்துவரும் நிலையில், அதற்கு அமெரிக்கா பதிலடி தரும் என்ற யூகங்களும் வலுத்துவரும் பின்னணியில் வட கொரியா ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தியுள்ளது.

  

இதற்கிடையில் வடகொரியாவின் அச்சுறுத்தலை வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop கண்டனம் செய்தார். வடகொரியா தனது அணுகுண்டு வல்லமையால் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்த நினைப்பதிலிருந்தே ஏன் வடகொரியாவிடம் அணுகுண்டு வல்லமை இருக்ககூடாது என்ற தமது நிலைப்பாடு நியாமானது என்றார் அவர்.      


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now