SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா நாளொன்றுக்கு $430 மில்லியன்களை நலன்புரி சேவைகளில் செலவிடுகிறது!

A Centrelink sign
A new report states welfare spending across Australia has risen by $40 billion in nine years. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய அரசும் மாநில அரசுக்களும் நாளொன்றுக்கு 430 மில்லியன் டொலர்களை நலன்புரி கொடுப்பனவு மற்றும் சேவைகளில் செலவிடுவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2015-16 நிதியாண்டில் சுமார் 157 பில்லியன் டொலர்கள் நலன்புரி கொடுப்பனவு மற்றும் சேவைகளில் செலவிடப்பட்டுள்ளதாகவும் இது கடந்த 2006-07ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 பில்லியன் டொலர்கள் அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் மூன்றில் இரண்டு வீதமான பண கொடுப்பனவுகள்(105 பில்லியன் டொலர்கள்) வேலையற்றவர்கள் தவிர்ந்த ஏனைய ஒரு சாராருக்குச் செல்வதாகவும் 10 பில்லியன்கள் வேலையற்றவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம் 27 வீதமான தொகை வெவ்வேறுபட்ட சேவைகளுக்கென ஒதுக்கப்படுகின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now