SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் புராதன மையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்!

Budj Bim in National heritage list
Source: Budj Bim Sustainable Development Partnership

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

விக்டோரியாவிலுள்ள பூர்வகுடிகளின் புராதன நீர்வேளாண்மை மையம் உலகின் மிகப்பழமையான தொன்ம அடையாளங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Budj Bim என்ற இடம் உலகின் மிகப்பழமையான தொன்மங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் வரலாற்றுச்சின்னம் ஒன்று முதல் தடவையாக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.

Budj Bim என்ற இந்த பூர்வ குடிகளின் மிகப்பழமையான நீர்வேளாண்மை மையம் எகிப்திய பிரமிட்டுக்களிலும் பார்க்க பழமையான வரலாறு உடையதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6600 வருடங்கள் பழமையான வரலாறு உடைய இந்த மையமானது ஆஸ்திரேலிய பூர்வீக குடிகளினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த பாரம்பரிய பிரதேசத்தின் முக்கியத்துவம் கண்டறிப்பட்டு யுனெஸ்கோவிடம் எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு 17 வருடங்களுக்கு பின்னர் அது சாத்தியமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்றுள்ள இந்த இடத்தக்கு சுற்றுலாப்பயணிகள் சென்று வருவதற்கு ஏதுவாக, இம்மையத்தினை பேணும் வகையில் விக்டோரிய அரசு சுமார் 80 லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now