ஆஸ்திரேலிய தொழிலாளர்களிடம் சுரண்டப்பட்ட 4 கோடி டொலர்கள் மீட்பு!

The exterior of Fair Work Commission Building (AAP).

The exterior of Fair Work Commission Building. Source: AAP

ஆஸ்திரேலிய வேலைத்தளங்களில் கடந்த வருடம் மாத்திரம் தொழிலாளர்களிடம் சுரண்டப்பட்ட சுமார் நாலு கோடி டொலர்களுக்கும் மேற்பட்ட பணத்தினை, நிறுவனங்களிடமிருந்து பெற்று தொழிலாளர்களிடம் சேர்ப்பித்திருப்பதாக Fair Work Commission வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாத காலப்பகுதியில் Fair Work Commission விசாரித்த சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்களின் 29 ஆயிரம் சம்பளப்பிரச்சினைகளுக்கு உரிய நீதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் Fair Work Commission இணையத்தளம் ஒரு கோடி 78 லட்சம் தடவைகள் பார்க்கப்பட்டதன் ஊடாகவும் Fair Work Commission-க்கு மூன்று லட்சத்து 80 ஆயிரம் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியதன் ஊடாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நீதியை பெற்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பள நிலுவைகள் மற்றும் அவர்களிடம் சுரண்டப்பட்ட ஊதியங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது மாத்திரமல்லாமல், குறிப்பிட்ட குற்றங்களை இழைத்த தொழில் வழங்குனர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் தண்டபணங்களை Fair Work Commission அறவிட்டுள்ளது.


1 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now