நடைபெற்றுமுடிந்த ஆஸ்திரேலிய தேர்தல் 2019-க்கான வாக்குகள் எண்ணும்பணி தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.
இதுவரை எண்ணிமுடிக்கப்பட்டுள்ள 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பிரதமர் Scott Morrison தலைமையிலான லிபரல் நஷனல் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எண்ணிமுடிக்கப்பட்டுள்ள வாக்குகளின்படி லிபரல் நஷனல் கூட்டணி 74 ஆசனங்களையும் லேபர் கட்சி 66 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 6 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிபரல் நஷனல் கூட்டணி ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறும் என உறுதியாக கூறமுடியாதுவிட்டாலும் சுயாதீன வேட்பாளர்களின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் என அரசியல் அவதானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
இதேவேளை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்
- உள்துறை அமைச்சர் Peter Dutton தனது Dickson ஆசனத்தை தக்கவைத்துள்ளார்.
- பிரதமர் Scott Morrison தனது Cook ஆசனத்தை தக்கவைத்துள்ளார்.
- எதிர்கட்சித் தலைவர் Bill Shorten தனது Maribyrnong ஆசனத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
- முன்னாள் பிரதமர் Tony Abbott தனது Warringah ஆசனத்தை சுயாதீன வேட்பாளர் Zali Steggall-இடம் இழந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக இவ்வாசனத்தை Tony Abbott தக்கவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
