ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு பல வழிகளிலும் உதவிபுரிந்த Trevor Grant அவர்கள் காலமானார்.
நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.
தமிழ் ஏதிலிகள் கழகத்துடன் இணைந்து, புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த Trevor Grant அவர்கள், ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்படும் பல நிகழ்வுகளுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிவந்துள்ளார்.
ஊடகத்துறையில் 35 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவர் ஈழத்தமிழர்கள் விடயம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகைகளான the Age, Herald Sun, The Australian உள்ளிட்டவற்றில் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.
அத்துடன் 2011ம் ஆண்டு ""Sri Lanka's secrets- How the Rajapaksa regime gets away with murder" என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.