ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை Sally Pearson தடகள போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தடவை தடை தாண்டும் ஓட்டத்தில் பதக்கம் வென்ற Sally Pearson ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஒரு வருடத்துக்கும் குறைவான காலப்பகுதியுள்ள நிலையில் தனது ஓய்வை அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து காயங்களினால் உபாதைக்குள்ளாகிவரும் Sally Pearson இது தொடர்பில் ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டதாக கூறியிருக்கிறார்.
தனது விளையாட்டு வரலாற்றில் சவால்களை தொடர்ந்தும் தான் வெற்றிபெற்று வந்ததாகவும் ஆனால் தற்போது தனது உடலின் கட்டளையை கேட்கவேண்டிய சூழ்நிலையிலிருப்பதாகவும் Sally Pearson கூறினார்.
தனது ஓய்வு குறித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தனது சாதனைகள் குறித்து தான் பெருமை கொள்வதாகவும் Sally Pearson தெரிவித்தார்.
