
குறிப்பிட்ட சிறுமி தடுத்து வைக்கப்பட்டிருந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், அவர் உடல் மற்றும் உளவியல் காயங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அவருக்குப் போதிய பாதுகாப்பும் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"There's never any amount of compensation that can properly recognise what the lead plaintiff has gone through and what others went through on Christmas Island."
சுமார் 3 வருடங்களாக நடைபெற்றுவந்த சட்டப் போரின்பின்னர் (legal battle) அந்தச் சிறுமிக்கு இந்த வெற்றி கிட்டியுள்ளது. வாழ்நாள் முழுவதும் அச்சிறுமி அனுபவிக்கவுள்ள துன்பத்திற்கு ஒரு சிறிய அளவு நீதி கிடைத்துள்ளதாக இதுபற்றிப் பிரதம சட்டத்தரணி Tom Ballantyne கூறியுள்ளார். இப்போதுதான் அக்குழந்தையின் குடும்பம் நிம்மதியடைந்துள்ளதாக Asylum Seekers Project coordinator Sister Brigid Arthur தெரிவித்துள்ளார்.
"The lead plaintiff has PTSD.* She also suffered some significant dental issues. Mostly, it's been about the traumatic experiences that they had on Christmas Island and the role that conditions in detention played in that."
A-S எனப் புனைபெயரால் அழைக்கப்படும் அச்சிறுமி தொடர் சிகிச்சை பெறவேண்டும்.
இந்த வழக்கு ஆரம்பத்தில் அப்போதைய குடியேற்ற அமைச்சர் மற்றும் குடிவரவு திணைக்களம் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு வர்க்க நடவடிக்கையாக - class - action claim ஆகத் தொடங்கப்பட்டது. அக்காலப்பகுதியான August 2011 and August 2014 இல் 35,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் Christmas Island முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த A-S வழக்கு முடிவிலிருந்து மேலும் பலர் முன்வந்து இழப்பீடு கோருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
"We believe that there were significant problems on Christmas Island and the treatment of refugees in detention has been a disgrace, frankly. And so, hopefully, this gives those people some measure of confidence in coming forward if they want to."
இதுபற்றி ஆஸ்திரேலிய அரசு தனது கருத்தினைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.
"The evidence is there, that detention harms people. It causes, in some cases, irreparable harm and, in other cases, harm that people will carry for life. We do not believe detention is necessary."
