SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவுக்கு தபாலில் அனுப்பப்பட்ட விஷஜந்துக்கள்!

Australian Border Force
Source: Australian Border Force

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: The Guardian



Skip to article content

மெல்பேர்னிலுள்ள சர்வதேச தபால் அறைக்கு வந்துசேர்ந்த பொதி ஒன்றினுள் உயிருள்ள கொடிய விஷப்பாம்புகள், சிலந்திகள் மற்றும் தேள் என்பன இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஐரோப்பாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொதியினுள் 11 பாம்புகள், 9 சிலந்திகள் மற்றும் 4 தேள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பொதியின் மேல் இரண்டு காலணிகள் உள்ளே இருப்பதாக எழுதப்பட்டிருந்ததாகவும், ஆனால் சுங்க அதிகாரிகள் இப்பொதியை ஸ்கேன் செய்துபார்த்தபோது உயிருள்ள விஷ ஜந்துக்கள் உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இப்படியான ஜந்துக்கள் நாட்டுக்குள் அனுப்பப்பட்டு அவற்றினூடாக நோய்களும் கிருமிகளும் பரப்பப்படுவதானது, பாரிய biosecurity அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்று என விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக Australian Border Force அதிகாரி James Watson தெரிவித்தார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now