SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவுக்கு யார் அதிகம் வருகின்றனர்? ஏன் வருகின்றனர்?

ஆஸ்திரேலியாவுக்கு யார் அதிகம் வருகின்றனர்? ஏன் வருகின்றனர்? எதை வாங்குகின்றனர்?

Eastern grey kangaroos fight on 'Look At Me Now Headland' at Emerald Beach in northern New South Wales, Wednesday, August 2, 2017. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING
Eastern grey kangaroos fight in northern New South Wales, Wednesday, August 2, 2017. (AAP Image/Dave Hunt) NO ARCHIVING Source: AAP

2 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

உலகில் அதிகம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. நீண்ட கடற்கரை, அழகு கொஞ்சும் இயற்கையான பூமி, விரிந்த நிலப்பரப்பு என்று ஒரு சுற்றுலாப் பயணி தேடிப்பிடித்து பார்த்து ரசிக்கும் பல இடங்கள் ஆஸ்திரேலியா என்ற கண்டத்தில் இருப்பது சுற்றுலாப் பயணிகளை காந்தமாய் கவரும் பூமியாக ஆஸ்திரேலியாவை மாற்றியுள்ளது.

கடந்த ஆண்டில் (2017) ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் எண்பது லட்சமாகும்.

இப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செலவழிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவும் காரணிகளில் ஓன்று. கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் 42 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டுகளைவிட 6 சதம் அதிகமாகும்.

இப்படி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செலவு செய்வதால் அதன் காரணமாக சுற்றுலாத்துறை தொடர்பான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப்பயணிகள் வந்து குவிந்தாலும், அவர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் செல்வதில்லை. குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா போன்ற மாநிலத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவுதான். அதே வேளையில் New South Wales மாநிலத்திற்கே அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்றும், அதற்கு அடுத்தபடி விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்கள் அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

அதே வேளையில் முன்பு எப்போதும் இல்லாத அளவு தாஸ்மேனியா மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த சிறிய மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஆண்டு செலவிட்ட தொகை சுமார் 500 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது.

சரி, யார் அதிகமாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகின்றார்கள் என்றால், முதலிடம் சீனர்கள், இரண்டாம் இடம் நியூ சிலாந்து நாட்டைச் சார்ந்தவர்கள். மூன்றாம் இடம் அமெரிக்கர்கள். இதில் குறிப்பிடும்படியான இன்னொரு நாட்டின் பயணிகளும் ஆஸ்திரேலியா வருகை தருவது அதிகரித்துள்ளது. அது இந்தியர்கள். இவர்களின் வருகை கடந்த ஆண்டு 16 சதம் அதிகரித்துள்ளது என்றும், இந்தியர்கள் 1.4 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளனர் என்றும் புள்ளிவிவரம் கூறுகிறது.

சரி, முக்கியமாக எதற்காக  சுற்றுலாப் பயணிகள் அதிகம் செலவழிக்கின்றனர்?

உணவு மற்றும் , விடுதிகளில் உண்பது என்பனவற்றிற்கே அவர்கள் அதிகம் செலவிடுகின்றனர்.          


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now