ஆஸ்திரேலியாவை குடியரசு நாடாக்குவோம் என்று பிரதமர் Malcolm Turnbull நேற்று அழைப்புவிடுத்தார். ஆஸ்திரேலியாவை குடியரசு ஆக்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட அமைப்பு உருவான 25 ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி நேற்று சிட்னி பலகலைகழகத்தில் நடைபெற்றுது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் Turnbull அவர்கள் ஆஸ்திரேலியாவை குடியரசு நாடாக்க சாதாரண மக்கள் மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கூறினார். ஆனாலும் தற்போதைய அரசி இரண்டாம் எலிசபெத் அரியணையில் இருக்கும்வரை ஆஸ்திரேலியா குடியரசாக மாறும் தருணம் வரவில்லை என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.
ஆஸ்திரேலியாவை குடியரசு நாடாக மாறவேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கும் கருத்துத் தேர்தல் 1999ஆம் ஆண்டு நடந்தபோது ஆஸ்திரேலியாவை குடியரசு நாடாக மாறவேண்டும் என்ற கொள்கை கொண்ட அமைப்பின் தலைவராக செயல்பட்டவர் Malcolm Turnbull ஆவார்.
Share
