SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய வாகன ஓட்டுநர்களின் ஆபத்தான செயல்கள்!

Dangerous Driving
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் வாகனமோட்டும் 10.9 மில்லியன் பேர் அதாவது மொத்த சனத்தொகையின் 62 வீதமானவர்கள் தாம் வாகனமோட்டும்போது ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஒப்புக்கொண்டிருப்பதாக The Safe Driving Report 2018 தெரிவித்துள்ளது.

Finder.com.au-ஆல் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின்படி வாகனமோட்டும் போதோ சிக்னல்களில் நிறுத்தியிருக்கும் போதோ அவர்களின் கவனத்தை சிதறடித்து உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கீழ்க்காணும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

1.    38 வீதமான வாகன ஓட்டுநர்கள் take away உணவு வகைகளை சாப்பிடுகின்றனர்.

2.    31 வீதமானவர்கள் shoes-சப்பாத்துகளுக்குப் பதிலாக pedals-க்குள் அகப்படக்கூடிய thongs எனப்படும் செருப்புகளை அணிந்து வாகனமோட்டுகின்றனர்.

3.    20 வீதமானவர்கள் text msg-குறுஞ்செய்திகள் அனுப்பும் அதேநேரம் 13 வீதமானவர்கள் தமது காதுகளுக்கருகில் கைபேசியை வைத்து    பேசுகின்றனர்.

4.    14 வீதமானவர்கள் புகைப்பிடிக்கின்றனர்.

5.    10 வீதமானவர்கள் தமது முழங்கால்களால் steering wheel-ஐ இயக்குகின்றனர்.

6.    5 வீதமானவர்கள் வாகனத்திற்குள்ளேயே உடைமாற்றுகின்றனர்.

7.    8 வீதமானவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்ற அதேநேரம் 4 வீதமானவர்கள் புத்தகம் படிக்கின்றனர்.

8.    5 வீதமானவர்கள் make-up ஒப்பனை செய்வதில் ஈடுபடுகின்றனர்.

இவை தவிர பலர் வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் குட்டித்தூக்கம் போடுவது என பல உயிராபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now