SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் அதிகளவானோருக்கு வைக்கப்படும் பெயர்கள் எவை தெரியுமா?

Pixabay
Source: Pixabay

1 min read

Published

Updated

By Jackson Gothe-Snape

Presented by Renuka.T



Skip to article content

உலகிலேயே பல்கலாச்சாரத்தன்மை வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நாடு ஆஸ்திரேலியா என்பதை

அரசு அடிக்கடி வலியுறுத்திவருகிறது. 

இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலிய மக்களில் அதிகளவானோருக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறதென்ற ஆராய்ச்சியை மேற்கொண்ட McCrindle அமைப்பு,  ஆஸ்திரேலியாவின் பிரபல பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த 4 வருடங்களில் பிறந்த பெரும்பாலான ஆண் குழந்தைகளுக்கு, Oliver என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரின் மூலமானது வட மேற்கு ஐரோப்பா, ஸ்கன்டினேவியா மற்றும் இங்கிலாந்தாக காணப்படுகின்றது.

இது தவிர ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்துவரும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

sbs
Source: SBS

அதேநேரம் ஆஸ்திரேலியாவின் அதிகமான பெண் குழந்தைகளுக்கு Charlotte, Olivia, Mia, Ava போன்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்களின் வேரும் வடமேற்கு ஐரோப்பாவாகவே காணப்படுகின்றது.

sbs
Source: SBS

ஆஸ்திரேலிய பாரம்பரியத்திற்குள் அடங்காத Luca, Kai, Muhammad, Sofia, Mila, Milla, Ayla, Aisha போன்ற பெயர்களும் ஆஸ்திரேலியாவின் பிரபல பெயர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த விரிவான ஆங்கிலக் கட்டுரைக்கு: How popular are Australia’s multicultural names?

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now