ஆஸ்திரேலியாவில் ஆங்கிலம் தவிர ஏனைய மொழி பேசுபவர்கள் என்ற தொகுதியில் கிரீக் மற்றும் இத்தாலிய மொழிப்பாவனை குறைவடைந்து இந்திய மொழிகளை பேசுபவர்கள்தான் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துவருவதாக நடைபெற்று முடிந்த சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆங்கிலம் தவிர பஞ்சாபி, குஜராத்தி, மலையளம் மற்றும் ஹிந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையும் சீனாவின் மாண்டரின் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த காலங்களில் கணிசமானளவு அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சனத்தொகையில் 20.8 வீதமானவர்கள் வீட்டில் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளும் பேசுகிறார்கள் என்று 2016 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வீதமானது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 72 வீத அதிகரிப்பு என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பில் மொழிவாரியாக மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக ஆய்வில், ஆஸ்திரேலியாவில் ஐரோப்பிய மொழிப்பாவனை படிப்படியாக அருகிவருவதாகவும் ஆசிய மொழிப்பாவனையின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
