ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் ஆஸ்திரேலிய விளம்பரத்தில், இந்துக் கடவுட்களில் ஒருவராக வணங்கப்படும் விநாயகரும் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு இந்து அமைப்புக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
Meat and Livestock Australia என்ற நிறுவனத்தின் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் அமைந்த புதிய வீடியோ விளம்பரத்தில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுட்கள் மற்றும் இறைதூதர்களோடு, விநாயகர் போன்ற வேடமணிந்த ஒருவரும் பங்கேற்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விளம்பரமானது இந்து மதத்தவர்களை அவமதிப்பதாகவும் அவர்களது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக பல அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
எனினும் மத இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவு Lamb என்பதை அடையாளப்படுத்தும்விதமாகவே தாம் அந்த விளம்பரத்தை அமைத்திருந்ததாகவும், எவரது மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கம் தமக்குக் கிடையாது என்றும் Meat and Livestock Australia நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த விளம்பரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சில கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
