SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் சிறை செல்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு!

A new Productivity Commission report shows the rate of Australians in prison has climbed by almost 30 per cent in the past 10 years.
A new Productivity Commission report shows the rate of Australians in prison has climbed by almost 30 per cent in the past 10 years. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

கடந்த ஒரு வருடத்தில் ஆஸ்திரேலிய சனத்தொகையில் 100,000 பேருக்கு 217 பேர் என்ற கணக்கில் பலர் சிறைக்கு சென்றிருக்கிறார்கள் என Productivity Commission வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில்  நாளொன்றுக்கு சிறைவைக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை 43 ஆயிரம்பேராக காணப்படும் அதேநேரம் இன்னும் 14 ஆயிரம்பேர் தீர்ப்பு வழங்கப்படவேண்டிய பட்டியலில் காத்திருக்கிறார்கள் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய வளர்ச்சி குறித்து ஆராயும் ஆணைக்குழு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் நாட்டிலுள்ள சகல சிறைச்சாலைகள் குறித்தும் விரிவான தகவல் சேகரிப்பு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் பிரகாரம் கடந்த பத்து வருடங்களில் ஆஸ்திரேலிய சிறைகளுக்கு அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தினால் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

தற்போதைய சிறைகளை நிர்வகிப்பதற்கு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 41.1 பில்லியன் டொலர்கள் செலவாகிறது.

கடந்த ஆண்டு சிறை சென்றுள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஒவ்வொரு மூன்று பெண் சிறைக்கைதிகளில் ஒருவர் ஆஸ்திரேலிய பூர்வீக குடியை சேர்ந்தவராக காணப்படுபவதாகவும் இந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now