SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் இங்கு வாழ்வோருக்கே நீண்ட ஆயுள்!

இறப்பு என்பது எதிர் பாராத ஒரு சம்பவம் என்றாலும் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத நிச்சயமானதொன்று. நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் ஆயுள் நிச்சயிக்கப்படுவதாக Australian Institute of Health and Welfare (AIHW) எனப்படும் ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலன்புரி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Generic image of man playing golf
Generic image of man playing golf Source: AAP

1 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள Life expectancy and potentially avoidable deaths, 2013-2015 எனும் அறிக்கையின் படி ஆஸ்திரேலியர்களின் ஆயுற்காலம் பொதுவாக மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் இது எல்லா மாநிலங்கள் மற்றும் எல்லா பிரதேசங்களுக்கும் பொருந்தாது.

Northern Sydney யில் வாழ்வோரின் சராசரி வாழ்வுக்காலம் 85.5 வருடங்களாகும். இங்கு வாழ்வோரே ஆஸ்திரேலியாவில் நீண்ட ஆயுட்காலம் உடையவர்கள். இதேவேளை மிக்க குறுகிய ஆயுட்காலமுடையவர்கள் Northern Territory யில் வாழ்வோராகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் 77.7 வருடங்களாகும்.

பொதுவாக 2013 மற்றும் 2015 க்கு இடையில் பிறந்த ஆஸ்திரேலியர்கள்,82.4 வருடங்கள் வாழ்வார்கள் என்றும், 2011, 2013 இடையில் பிறந்தவர்கள் 82.1 வருடங்கள் வாழ்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தடுக்கப்படக்கூடிய காரணங்களினால், (உதாரணமாக விபத்துகள், சிலவிதமான நோய்கள்) உயிரிழப்போரின் எண்ணிக்கையும் ஆஸ்திரேலியாவில் நீங்கள் வாழும் இடத்தப் பொறுத்து வேறுபடுகிறது. அப்படியான மரணங்கள் ஆஸ்திரேலியாவிலேயே மிக அதிகமாக 100,000 பேருக்கு 262 என Northern Territory யில் நிகழ்கிறது. இதேவேளை Northern Sydney யில் 62 ஆக்கவுள்ளது.

பொதுவாக ஆஸ்திரேலியாவில் பெருநகர்ப் புறங்களில் வாழ்வோர் பிராந்திய பிரதேசங்களில் வாழ்வோரைவிட அதிககாலம் திடமாக வாழ்வதாக AIHW இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now