SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அதிக பணம் வசூலித்த இந்திய படம் எது?

Kabir Singh
India to reopen cinema halls under strict COVID-19 guidelines. Source: Unsplash

1 min read

Published

Updated

Presented by Renuka

Source: SBS Punjabi


Skip to article content

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களின் வரிசையில் Kabir Singh ரசிகர்களின் மத்தியில் பெரு வரவேற்பை பெற்றுள்ளதாக ஆஸ்திரேலிய திரையரங்குகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியான இரண்டு நாட்களிலேயே ஒன்பது லட்சத்துக்கு 59 ஆயிரத்து 994 டொலர்கள் பெறுமதியான டிக்கெட் வருவாயை Kabir Singh பெற்றிருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Kabir Singh திரைப்படத்துக்கு அடுத்ததாக GullyBoy, Uri, Bharat, Kalank ஆகிய திரைப்படங்கள் இடபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தி திரைப்பட விமர்சகர்கள் வட்டத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டபோது - Kabir Singh திரைப்படமானது பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது என்றும் பல்வேறு மட்டங்களில் விருப்பத்துக்குரிய திரைப்படமாக தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பிடித்துப்போயிருப்பது அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தருகிறது- என கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஏனைய திரைப்படங்களை அவை ஈட்டிய வருமானத்தின் வரிசையில் www.boxofficemojo.com இணையத்தளம் பட்டியலிடும்போது - Avengers: Endgame, Captain Marvel, Toy Story 4, Aladdin (2019), Spider-Man: Far from Home, Us, John Wick: Chapter 3 - Parabellum, How to Train Your Dragon: The Hidden World, The secret life of pets 2, Pokemon detective Pikachu ஆகிய படங்கள் முதல் பத்து இடங்களை பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now