SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் குடியேற முன்பே விண்ணப்பிப்பவரைக் கண்காணிக்க அரசு தயாராகிறது.

ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து வருவதற்கு விண்ணப்பிப்போர், தமது சொந்த நாடுகளிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே screening எனப்படும் பின்னணி மதிப்பீடுகளை நடத்தும் விதத்தில் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது.

cc
Source: SBS

1 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content

ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்வதற்கு விண்ணப்பிப்பவர்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை Peter Dutton இன் new Home Affairs திணைக்களம் சேகரிக்க அனுமதிக்கும் விதத்திலான சட்ட மாற்றமொன்றை Turnbull அரசாங்கம் பரிசீலித்து வருவதாக திணைக்களத்தின் உள்துறை செயலர் Michael Pezzullo, The Daily Telegraph பத்திரிகைக்குக் கூறியுள்ளார்.

"Prior to you even getting citizenship, before you even migrate, the government is looking at how do you make an assessment using intelligence, using all sources of information," Mr Pezzullo told the newspaper.

ஒருவர் குடிபெயரும் முன், அந்நபர் பற்றிய அனைத்து உளவுத்துறை தகவல்களின் ஆதாரங்களையும் பயன்படுத்தி எப்படி மதிப்பீடு செய்வது என்பதை அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக திரு Pezzullo தெரிவித்தார்.

Mr Pezzullo said the assessments would use a range of “data sources” to check whether would-be migrants were likely to "conform with and live by Australian values" by analysing their "lived behaviour".

இப்புதிய உத்தேச சட்ட மாற்றத்தின்படி, குடிபெயர்ந்து வருவோருக்கு மூன்று நிலைகளில் அவர்கள் பற்றிய மதிப்பீடு இருக்கும்.

1. ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பாக அவர்களது சொந்த நாட்டில்:

2. இங்கு ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும்போது:

3. குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும்போது

Minister for citizenship Alan Tudge told the Telegraph the government wanted to move to a model of "ongoing assessment" of migrants before they apply for citizenship.

வருடாந்தக் குடிவரவு அறிக்கையின் படி, 2011ம் ஆண்டிலிருந்து ஒவ்வொருவருடமும் சுமார் 190,000 நிரந்தர குடியேற்றவாசிகளை ஆஸ்திரேலியா உள்வாங்குகிறது. இதில் பெரும்பாலானவர்கள் திறமை அடிப்படையிலான மற்றும் குடும்ப விசாக்களில் வருவோராகும். ஆனால் இப்புதிய உத்தேச திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவோரின் விகிதாசாரங்கள் சரியாக இன்னும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, இந்த அரசாங்கமானது அகதிகளுக்கும் குடிபெயர்ந்து வருவோருக்கும் எதிராக கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும், அரசின் இச்செயல் தனக்கு எவ்வித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லையெனவும் Labor கட்சியின் செனட்டர் Doug Cameron அரசாங்கத்தைக் குற்றம் சாட்டினார்.

Labor senator Doug Cameron accused the government of using coded messaging and dog-whistle politics.

இதேவேளை பிறிதொரு Labor கட்சி செனட்டர் Jenny McAllister கூறுகையில், எதிர்க்கட்சியானது அரசாங்கத்தின் இப்புதிய உத்தேச திட்டத்தின் விவரங்களைப் பார்ப்பதற்குக் காத்திருப்பதாக கூறினார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now